நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது 170 ஆவது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி, கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் படத்தினை இயக்கி வருகிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் வேட்டையன் படத்திலிருந்து சமீபத்தில் மனசிலாயோ எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் இணையத்தில் செம வைரலாகி வரும் நிலையில் பலரும் சமூக வலைதளங்களில் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து வருகின்றனர்.
Superstar celebrating Onam in style from the sets of #Coolie 🔥💥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/VhVNhmS2hI
— Sun Pictures (@sunpictures) September 15, 2024
இந்நிலையில் (செப்டம்பர் 15) இன்று ஓணம் பண்டிகையை ஒட்டி கூலி படப்பிடிப்பு தளத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக ரஜினி மற்றும் கூலி படக்குழுவினர்கள் வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடியுள்ளனர். தொடர்பான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.