spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ப்ராஜெக்ட்டில் ரஜினி.... இயக்குனர் இவரா?

பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ப்ராஜெக்ட்டில் ரஜினி…. இயக்குனர் இவரா?

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினி. இவரது நடிப்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் வெளியானது. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ப்ராஜெக்ட்டில் ரஜினி.... இயக்குனர் இவரா?அதை தொடர்ந்து 2025 ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியாக இருக்கிறது. ரஜினியின் 171 வது படமான இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைக்க கிரிஷ் கங்காதரன் இந்த படத்தில் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது டப்பிங் போன்ற பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் நடிகர் ரஜினி, ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ரஜினி, வேல்ஸ் நிறுவனத்துடன் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ப்ராஜெக்ட்டில் ரஜினி.... இயக்குனர் இவரா?அதன்படி இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக மாரி செல்வராஜ் சொன்ன கதையை ரஜினி நிராகரித்து விட்டார் என்று தகவல் வெளியாகி வருகின்றன. எனவே வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தின் இயக்குனர் யார்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலா வரும் நிலையில் தற்போது இது தொடர்பான புதிய அப்டேட் கிடைத்துள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ப்ராஜெக்ட்டில் ரஜினி.... இயக்குனர் இவரா?அதாவது வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தினை இயக்குனர் சுந்தர்.சி இயக்கி வருகிறார். ஆதலால் சுந்தர்.சிக்கும், வேல்ஸ் நிறுவனத்திற்கும் நல்ல நட்பு இருப்பதன் காரணமாக ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் சுந்தர்.சியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருக்கணும் ரஜினியின் அடுத்த படம் இயக்குனர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே சுந்தர். சி, ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ