spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகோடிகளை அள்ளப்போகும் நெல்சன்.... 'ஜெயிலர் 3'-ஆம் பாகத்திற்கும் பிளான் போடும் ரஜினி!

கோடிகளை அள்ளப்போகும் நெல்சன்…. ‘ஜெயிலர் 3’-ஆம் பாகத்திற்கும் பிளான் போடும் ரஜினி!

-

- Advertisement -

ஜெயிலர் 3-ஆம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கோடிகளை அள்ளப்போகும் நெல்சன்.... 'ஜெயிலர் 3'-ஆம் பாகத்திற்கும் பிளான் போடும் ரஜினி!

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினி, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். பல கேமியோ ரோல்களும் இதில் இடம் பெற்றிருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. எனவே இதைத்தொடர்ந்து நெல்சன் – ரஜினி கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. பொதுவாக ரஜினி, எந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்க மாட்டார். கோடிகளை அள்ளப்போகும் நெல்சன்.... 'ஜெயிலர் 3'-ஆம் பாகத்திற்கும் பிளான் போடும் ரஜினி!ஆனால் நெல்சன் இயக்கத்தில் மட்டும்தான் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் சமீபத்தில் ரஜினி இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி ரிலீஸாகும் எனவும் அப்டேட் கொடுத்திருந்தார். இவ்வாறு படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த அப்டேட்டுகளை கொண்டாடி தீர்ப்பதற்குள் தற்போது புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.கோடிகளை அள்ளப்போகும் நெல்சன்.... 'ஜெயிலர் 3'-ஆம் பாகத்திற்கும் பிளான் போடும் ரஜினி! அதாவது ஜெயிலர் 2 படத்தின் ரீ – ரெக்கார்டிங் இல்லாத காட்சிகளை ரஜினி பார்த்துவிட்டாராம். அதை பார்த்த பின் இயக்குனர் நெல்சனை கட்டிப்பிடித்து ஜெயிலர் 3 அல்லது வேறொரு புதிய படம் நாம் பண்ண வேண்டும் என்று கூறியுள்ளாராம். இந்த தகவல் நெல்சனுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

ஏற்கனவே ரஜினியின் கூலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் அடுத்தது ரசிகர்கள் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கோலிவுட்டில் ரூ. 1000 கோடியை அள்ளி விடும் என்று நம்புகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் 3 படம் குறித்த அப்டேட் வெளியாகி இருப்பது நெல்சனின் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகமாக்கியுள்ளது. எனவே நெல்சன் ஜெயிலர் படத்தில் நிகழ்த்திய மேஜிக்கை ஜெயிலர் 2 படத்திலும் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ