Homeசெய்திகள்சினிமாரஜினி, லோகேஷின் 'கூலி'..... இதுவரை பார்த்திராத அவதாரத்தில் அமீர்கான்!

ரஜினி, லோகேஷின் ‘கூலி’….. இதுவரை பார்த்திராத அவதாரத்தில் அமீர்கான்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருந்த வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ரஜினி, லோகேஷின் 'கூலி'..... இதுவரை பார்த்திராத அவதாரத்தில் அமீர்கான்!அதே சமயம் நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது படமான கூலி திரைப்படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு ஐதராபாத் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினி தற்போது ஓய்வில் இருப்பதால் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. எனவே லோகேஷ் கனகராஜ், மற்ற நடிகர்களின் பகுதிகளை படமாக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கூலி திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தொடர்ந்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதன்படி இது தொடர்பான பேச்சு வார்த்தை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாகவும் அமீர்கான் கூலி படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.ரஜினி, லோகேஷின் 'கூலி'..... இதுவரை பார்த்திராத அவதாரத்தில் அமீர்கான்! அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் அமீர்கான், இதுவரை பார்ரதிராத புதிய அவதாரத்தில் நடிக்கப் போகிறார் என்று லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ரஜினி, அமீர்கான் கூட்டணி கடந்த 1995இல் வெளியான ஆடங்க் ஹாய் ஆடங்க் என்ற திரைப்படத்தில் இணைந்திருந்தது. தற்போது இந்த கூட்டணி கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து மீண்டும் இணைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ