Homeசெய்திகள்சினிமாஉச்ச நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா..... லேட்டஸ்ட் அப்டேட்!

உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா….. லேட்டஸ்ட் அப்டேட்!

-

ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால்,தமன்னா, சிவராஜ்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயலராக முத்துவேல் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. தற்போது இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸுக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இதற்கிடையில் ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா மற்றும் ஹூக்கும் எனும் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடைய பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டுகளை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அதன்படி ஜெயிலர் படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 28ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் நடைபெற இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ