spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'மாமன்னன்' சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு அருமையான படைப்பு..... ரஜினிகாந்த் பாராட்டு!

‘மாமன்னன்’ சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு அருமையான படைப்பு….. ரஜினிகாந்த் பாராட்டு!

-

- Advertisement -

மாமன்னன் படம் குறித்து ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் கூட்டணியில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி சுமார் 700 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற இத்திரைப்படம் 5 நாட்களில் 40 கோடி வரை வசூல் செய்துள்ளது.
அரசியலில் சாதிய ஒடுக்கு முறைகள் குறித்து மிகத் தெளிவாக கூறும் இப்படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

we-r-hiring

குறிப்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின், இயக்குனர் பா ரஞ்சித், நடிகர் தனுஷ் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், “மாமன்னன் திரைப்படம் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ