spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழ் சினிமாவின் முடிசூடா நாயகன் ரஜினி… சூப்பர் ஸ்டாருக்கு குவியும் பாராட்டுகள்!

தமிழ் சினிமாவின் முடிசூடா நாயகன் ரஜினி… சூப்பர் ஸ்டாருக்கு குவியும் பாராட்டுகள்!

-

- Advertisement -

திரையுலகில் 50 ஆண்டு பயணத்தை நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.தமிழ் சினிமாவின் முடிசூடா நாயகன் ரஜினி… சூப்பர் ஸ்டாருக்கு  குவியும் பாராட்டுகள்! சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறார். 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரஜனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நடிகர் ரஜினிகாந்த் சினிமா துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முடிசூடா நாயகனாக வளம் வரும் ரஜினிகாந்த் பல தலைமுறை நடிகர்களை பார்த்துவிட்டார். சூப்பர் ஸ்டார் கமலஹாசன் உடன் அவர் சேர்ந்து நடித்த அபூர்வராகங்கள் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு வெளிவந்தது. கே.பாலச்சந்தர் மூலம் சினிமா துறையில் கால் எடுத்து வைத்த ரஜினிகாந்த் எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாச்சலம், கேஎஸ் ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா என பல இயக்குநர்கள் உடன் பணியாற்றி தற்போது லோகேஷ் கனகராஜ் வரை பயணித்து வருகிறார். அவரது நடிப்பில் கூலி திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

we-r-hiring

பொன்விழா அத்துடன் 50 ஆண்டு திரை பயணத்தையும் நிறைவு செய்கிறார். இதை அடுத்து ரஜினிகாந்துக்கு அரசியல் பிரபலங்களும் திரை கலைஞர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை ரஜினிகாந்த்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இசையமைப்பாளர் அனிருத் நடிகரும் மாநிலங்களவை எம்பியுமான கமலஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமிதமிழ் சினிமாவின் முடிசூடா நாயகன் ரஜினி… சூப்பர் ஸ்டாருக்கு  குவியும் பாராட்டுகள்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,”திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், ரஜினிகாந்த்க்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கமல்ஹாசன்தமிழ் சினிமாவின் முடிசூடா நாயகன் ரஜினி… சூப்பர் ஸ்டாருக்கு  குவியும் பாராட்டுகள்! நடிகரும் மாநிலங்களை எம்பியுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,” சினிமாவின் அரை நூற்றாண்டைக் குறிக்கும் என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று திரையுலகில் 50 ஆண்டுகளை கொண்டாடுகிறார். சூப்பர் ஸ்டாரை அன்புடனும் போற்றுதலுடனும் கொண்டாடுகிறேன், மேலும் இந்த பொன்விழாவிற்கு ஏற்றவாறு கூலி உலகளவில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என தனது வலைத்தளத்தில்  பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத்தமிழ் சினிமாவின் முடிசூடா நாயகன் ரஜினி… சூப்பர் ஸ்டாருக்கு  குவியும் பாராட்டுகள்! இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “50 வருடங்கள், ஒரு அரியணை, ஒரே ஆள்” என தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு உதவியவர்கள் யார்? தாக்குதல் நடந்தது எப்படி?… சு.வெங்கடேசன் தொடுத்த கேள்வி கணைகள்… திணறிய பாஜக…

MUST READ