ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினி கோழிக்கோடு சென்றுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்களும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பாலைய்யா, எஸ்.ஜே. சூர்யா, பகத் பாசில், செம்பன் வினோத் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஷாருக்கானிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகின்றனர். அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கி அட்டப்பாடியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
Superstar in Kozhikode, Kerala for #Jailer2 💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 12, 2025

அடுத்தது கோழிக்கோடில் 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்காக நடிகர் ரஜினி கோழிக்கோடு சென்றுள்ளார். அங்கு ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.