சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இன்று மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக நிலைத்து நிற்பவர் ரஜினி. இவர் தனது கடின உழைப்பினால் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி கோடான கோடி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர். சூரியன், சந்திரனைப் போல் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். அந்த வகையில் 74 வயதில் ஓயாது ஓடிக் கொண்டிருப்பவர். வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை இவரைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
#SuperStarRajinikanth WorkOut 💪❤️🔥#Cooliepic.twitter.com/jx6axLQzXJ
— Movie Tamil (@MovieTamil4) August 15, 2025
அந்த அளவிற்கு இந்த வயதிலும் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினி, மிகத் தீவிரமாக ஒர்க் அவுட் செய்வதிலும் சலித்த ஆள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். அதன்படி ரஜினி தற்போது ஒர்க் அவுட் செய்யும் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரஜினி நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது. அதே சமயம் ரஜினி இன்றுடன் (ஆகஸ்ட் 15) திரைத்துறையில் 50 வருடங்களை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.