Homeசெய்திகள்சினிமாதிருப்பதி கோயிலில் ரஜினி மகள்கள் சாமி தரிசனம்

திருப்பதி கோயிலில் ரஜினி மகள்கள் சாமி தரிசனம்

-

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் சாமி தரிதனம் செய்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் 3, மற்றும் கௌதம் கார்த்திக்கின் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கூட்டணியில் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். இதில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். மேலும், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சௌந்தர்யா இயக்குகிறார். கங்குலியின் பயோபிக் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், சௌந்தர்யா ரஜினிகாந்தும் திருப்பதி எழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் வந்திருந்தார். விஐபி பிரிவில் தரிசனம் செய்து வெளியே வந்த அவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ