Homeசெய்திகள்சினிமாவேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்

வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்

-

- Advertisement -
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்திய திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்திற்கு பிறகு அடுத்து நடிப்பதில்லை என்று தகவல் வெளியான நிலையில், தற்போது ரஜினி அடுத்தடுத்து பல இயக்குநர்களின் கதையில் ஒப்பந்தமமாகி வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் இயக்கிய இத்திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் ஜெயிலர் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, நெல்லை, மும்பை, புதுவை என மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்திற்குள்படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு செயல்படுகிறது. அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டையன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அது சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

MUST READ