spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸாகும் 'ரஜினிமுருகன்'!

9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸாகும் ‘ரஜினிமுருகன்’!

-

- Advertisement -

சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸாகும் 'ரஜினிமுருகன்'!சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றி பின்னர் வெள்ளித்திரையில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இருப்பினும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. இந்த படத்தை பொன்ராம் இயக்கியிருந்தார். பின்னர் மீண்டும் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்கள் வெளியான நிலையில் சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸாகும் 'ரஜினிமுருகன்'!ஆனால் ரஜினிமுருகன் திரைப்படம் பலரின் பேவரைட் படமாக அமைந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருந்தனர். காமெடி கலந்த கதைக்களத்தில் குடும்பப் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதே சமயம் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி இப்படம் 2025 மார்ச் மாதம் மீண்டும் ரிலீஸாக இருக்கிறது. விரைவில் இது குறித்த தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

MUST READ