- Advertisement -
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், பசுமைத் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரையுலகம் மட்டுமன்றி தென்னிந்திய திரையுலகிலும், டாப் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் கௌதம் கார்த்தி நடித்த என்னமோ ஏதோ படத்தில், நாயகியாக அறிமுகமானார். இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, எச் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கார்த்திக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.


தீரன் படத்தின் வெற்றி ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தமிழில் குவியத் தொடங்கின. இதைத் தொடர்ந்து, என்ஜிகே, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ராம்சரண், ரவி தேஜா, அல்லு அர்ஜூன் உள்பட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்தியிலும், அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன் என டாப் நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்.

