நடிகை ரகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஸ்பைடர், NGK, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்திலும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் நடிகராகுல் ப்ரீத் சிங் கடந்த 2021 இல் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானியை தனது காதலர் என அறிமுகம் செய்து வைத்தார். இவர் பாலிவுட் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய உள்ளார்களாம். அதன்படி ராகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்கானியின் திருமணம் 2024 பிப்ரவரி 22ஆம் தேதி கோவாவில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கிறதாம். இது சம்பந்தமான தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஜோடிகளுக்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.