Homeசெய்திகள்சினிமாவெறித்தனமான உடற்பயிற்சியில் ரகுல் ப்ரீத் சிங்... இணையத்தில் வைரல்...

வெறித்தனமான உடற்பயிற்சியில் ரகுல் ப்ரீத் சிங்… இணையத்தில் வைரல்…

-

- Advertisement -
 இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் பாலிவுட் திரையுலகில் டாப் நட்சத்திரமாக இருக்கிறார். தமிழில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக என்னமோ ஏதோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார். எச்.வினோத் இயக்கிய தீரன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றி ரகுல் ப்ரித் சிங்கிற்கு பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தன. தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக ரகுல் நடிப்பில் தமிழில் அயலான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார். ரவி தேஜா, ராம், ராம் சரண் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவரது நடிப்பில் தற்போது வெளியாக உள்ள திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். கமல்ஹாசனுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெறித்தனமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பிட்னஸ் மீது அதிக கவனம் செலுத்தும் நடிகை ரகுல், தனது கணவர் ஜாக்கி பாக்னானியுடன் சேர்ந்து அதிகளவில் உடற்பயிற்சி மேற்கொள்பவர் ஆவார்.

MUST READ