நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது காயமடைந்துள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருபவர். இவர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் சூர்யாவுடன் இணைந்து என் ஜி கே, சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் இந்தியன் 2 திரைப்படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இவ்வாறு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் ரகுல் ப்ரீத் சிங், நடிகர் ஜாக்கி பாக்னானியை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோ புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஜிம்மில் 80 கிலோ எடையை தூக்கும் பொழுது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதாவது ரகுல் ப்ரீத் சிங் எடையை தூக்கும்போது பெல்ட் அணியாமல் தூக்கி இருக்கிறார். இதன் காரணமாக அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ரகுல் பிரீத் சிங் தரப்பில், ஆரம்பத்தில் மிகுந்த வலி இருந்ததாகவும் இப்பொழுது ஓய்வெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.