Homeசெய்திகள்சினிமாராம் சரண் நடிக்கும் 'RC 16'... நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ராம் சரண் நடிக்கும் ‘RC 16’… நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

ராம் சரண் நடிக்கும் RC 16 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ராம் சரண் நடிக்கும் 'RC 16'... நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராம் சரண். இவரது நடிப்பில் கடைசியாக கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியானது. சங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியிடப்பட்டது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ராம் சரண், புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராம் சரண் நடிக்கும் 'RC 16'... நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்த படத்திற்கு தற்காலிகமாக RC 16 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு மைசூர் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராம் சரண் நடிக்கும் 'RC 16'... நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்நிலையில் (மார்ச் 27) ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 9.09 மணி அளவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த போஸ்டருடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ