spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் 'ராமாயணா'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் ‘ராமாயணா’…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -
kadalkanni

ராமாயணா படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ராமாயணக் கதையில் எத்தனை படங்கள் வந்தாலும் எத்தனை சீரியல்கள் வந்தாலும் அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். அந்த அளவிற்கு ராமாயண காவியத்தை விரும்பாதவர்கள் எவரும் இலர். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் 'ராமாயணா'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!ஏற்கனவே நந்தமுரி பாலகிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் ஶ்ரீ ராம ராஜ்யம் எனும் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் எனும் திரைப்படமும் வெளியானது. இந்நிலையில் அடுத்ததாக ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் ராமாயணா எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஸ்ரீராமனாக ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் நடித்து வருகின்றனர். மேலும் ராவணனாக நடிகர் யாஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை நமித் மல்கோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் 'ராமாயணா'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் ராமாயணா படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகவும் இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ