spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 'ராமாயணா' .... யாஷுக்கு ஜோடி யார் தெரியுமா?

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ‘ராமாயணா’ …. யாஷுக்கு ஜோடி யார் தெரியுமா?

-

- Advertisement -

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரைகளும் ராமாயண கதையில் பல படங்களும், சீரியல்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற எத்தனை படங்கள் வந்தாலும் ரசிகர்கள் அதை கொண்டாட தவறுவதில்லை. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 'ராமாயணா' .... யாஷுக்கு ஜோடி யார் தெரியுமா?அதன்படி ஏற்கனவே நந்தமுரி பாலகிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் ஸ்ரீராமராஜ்ஜியம் திரைப்படம் வெளியானது. அதன் பிறகு பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படமும் வெளியானது. அடுத்ததாக நமித் மல்கோத்ராவின் தயாரிப்பிலும் நிதேஷ் திவாரியின் இயக்கத்திலும் ராமாயணா திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் ரன்பீர் கபூர் ராமனாக நடிக்க, சாய் பல்லவி சீதையாக நடித்து வருகிறார். நடிகர் யாஷ் ராவணனாக நடிக்கிறார்.பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 'ராமாயணா' .... யாஷுக்கு ஜோடி யார் தெரியுமா? இப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும் வெளியாகும் எனவும் இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்படம் கிட்டத்தட்ட ஐந்து மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 'ராமாயணா' .... யாஷுக்கு ஜோடி யார் தெரியுமா? அதன்படி ராவணனாக நடிக்கும் யாஷின் மனைவி மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ