Homeசெய்திகள்சினிமாரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

-

- Advertisement -
kadalkanni

நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த 2015 இல் வெளியான டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!அதைத் தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை என பல வெற்றி படங்களில் நடித்து பெயர் பெற்ற ரம்யா பாண்டியன், பிக் பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இதன் பிறகு ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சினிமா வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!அதே சமயம் இவர், யோகா மாஸ்டர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களும் செய்திகள் பரவத் தொடங்கியது. அதன்படி லோபல் தவான் என்ற யோகா மாஸ்டரை பெற்றோர்கள் முன்னிலையில் இன்று (நவம்பர் 8) திருமணம் செய்து கொண்டார் ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!இவர்களின் திருமணம் ரிஷிகேஷில் சிவபுரி கங்கை நதிக்கரையில் நடந்து முடிந்துள்ளது. வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே ரசிகர்கள் பலரும் ரம்யா பாண்டியனுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ