Homeசெய்திகள்சினிமாநயன்தாராவின் திருமண ஆவணப்படம்..... நாளை வெளியாகும் ட்ரெய்லர்!

நயன்தாராவின் திருமண ஆவணப்படம்….. நாளை வெளியாகும் ட்ரெய்லர்!

-

- Advertisement -

நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்ஸிக் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.நயன்தாராவின் திருமண ஆவணப்படம்..... நாளை வெளியாகும் ட்ரெய்லர்!

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கோலாகலமாக இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இவர்களது திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களின் திருமண விழாவிற்கு ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்திய நிலையில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருமண விழாவில் கலந்து கொண்ட யாருக்கும் செல்போன் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் இவர்களது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆகையினால் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இது தொடர்பான அறிவிப்பும் வெளியான நிலையில் நாளை (நவம்பர் 9) NAYANTHARA- BEYOND THE FAIRY TALE என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நயன்தாராவின் திருமண ஆவணப்படம்..... நாளை வெளியாகும் ட்ரெய்லர்!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு வாடகைத் தாயின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலக் என்று  பெயர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது நயன்தாராவின் இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் குழந்தைகள் பிறந்தது வரையிலான காட்சிகளும் புகைப்படங்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ