“ரஞ்சிதமே” பாடலுக்கு நடன பயிற்சி மேற்கொண்ட விஜய்யின் வீடியோ வெளியீடு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியானது. வம்சி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜெயசுதா, யோகி பாபு உள்பட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து காட்சிகள் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுபோல கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ‘தீ தளபதி’ பாடலுக்கு விஜய் நடன பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியானது.

அதுமட்டுமில்லாமல் ரஞ்சிதமே பாடலில் கடைசி 1 நிமிடம் சிங்கிள் சாட்டில் விஜய் ஆடி இருப்பார். அதற்காக விஜய், ராஷ்மிகா நடன பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்வதை தொடர்ந்து, வைரலாகி உள்ளது.


