நடிகை ராஷ்கா மந்தனா, ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயரையும் புகழையும் பெற்று வருகிறார். இது தவிர கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா, ராகவா லாரன்ஸ் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது ராகவா லாரன்ஸ் தற்போது ‘பென்ஸ்’ படத்தில் நடித்து வரும் நிலையில் காஞ்சனா 4 படத்தையும் தானே தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே நடிகை பூஜா ஹெக்டே மற்றும் நோரா பதேகி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இதில் நடிகை ராஷ்மிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும்? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமெடி கலந்த ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.