ரஷ்மிகா மந்தான்னா நடிப்பில் உருவாகி வரும் ரெயின்போ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
நடிகை ரஷ்மிகா மந்தான்னா தற்போது பான் இந்தியா நடிகையாக மாறியுள்ளார். கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிக தெலுங்கு சினிமாவில் ஜொலிக்கத் தொடங்கினார். பின்னர் கார்த்தி உடன் சுல்தான் படம் மூலம் தமிழ் பக்கம் தலை காட்டினார். அதையடுத்து பாலிவுட் சென்று இந்திய அளவில் ரசிகர்கள் மனதில் வாடகை கொடுக்காமலே குடியேறியுள்ளார்.

தற்போது ராஷ்மிகா மந்தான்னா கதாநாயகியை மையமாக கொண்ட புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். படத்திற்கு ‘ரெயின்போ‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சாந்த்ரூபன் இயக்குகிறார். இவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.
இந்தப் படத்தை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது.
தற்போது படம் குறித்த அப்டேட் என்னவென்றால் ரெயின்போ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உற்சாகமாக இருப்பதாக ரஷ்மிகா தெரிவித்துள்ளார்.