Homeசெய்திகள்சினிமாரசிகனை பார்த்து ராஷ்மிகா செய்த நெகழ்ச்சி செயல்!

ரசிகனை பார்த்து ராஷ்மிகா செய்த நெகழ்ச்சி செயல்!

-

- Advertisement -

நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இந்திய அளவில் பிரபலமான இவர் நேஷனல் கிரஷ் என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.ரசிகனை பார்த்து ராஷ்மிகா செய்த நெகழ்ச்சி செயல்! சினிமாவிற்கு வந்த குறுகிய நாட்களில் பட்டி தொட்டி எங்கிலும் பிரபலமாகிவிட்டார் ராஷ்மிகா. தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி இவர், கடந்த ஆண்டில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தது சமீபத்தில் வெளியான சாவா, சிக்கந்தர் ஆகிய படங்களை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் குபேரா, தி கேர்ள்ஃப்ரெண்ட் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, பொதுவாகவே பொது இடங்களில் ரசிகர்கள் தன்னிடம் செல்ஃபி கேட்டு வந்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார். ரசிகனை பார்த்து ராஷ்மிகா செய்த நெகழ்ச்சி செயல்!அதேபோல் தான் தற்போதும் நடிகை ராஷ்மிகாவிடம் ரசிகர் ஒருவர் செல்ஃபி கேட்க, உடனே தானே ரசிகன் அருகில் வந்து போஸ் கொடுத்திருக்கிறார். சினிமாவில் பிரபலமான சில நடிகர், நடிகைகள் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க சென்றாலும் முகத்தை மறைத்துக் கொண்டு ஓடிவிடுகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் ராஷ்மிகா செய்த இந்த நெகழ்ச்சி செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

MUST READ