spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் குறித்து ரசிகர் கேள்விக்கு - ராஷ்மிகா பதில்?

விஜய் குறித்து ரசிகர் கேள்விக்கு – ராஷ்மிகா பதில்?

-

- Advertisement -

நடிகர் விஜய் பற்றிய ரசிகரின் கேள்விக்கு நச்சுனுபதில் அளித்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார்.

we-r-hiring

இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்.

ராஷ்மிகா சமூக வலைதளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாற்றினார். அப்பொழுது விஜய் ரசிகர் வருவார் வாரிசு படத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா இணைந்திருக்கும் படத்தை பகிர்ந்து விஜய் பற்றி ஒரு வார்த்தையில் பதில் கூறுங்கள் என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ரஷ்மிகா மந்தனா காதல் (LOVE…) என்று நச்சுன்னு பதில் அளித்து பகிர்ந்து இருந்தார் இந்த பதிவை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

MUST READ