Homeசெய்திகள்சினிமாரத்னம் படத்திற்கு யுஏ சான்றிதழ்... ஏப்ரல் 26 வெளியீடு...

ரத்னம் படத்திற்கு யுஏ சான்றிதழ்… ஏப்ரல் 26 வெளியீடு…

-

விஷால் நடித்துள்ள ரத்னம் படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். செல்லமே படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமான அவர், சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து முடித்துள்ள திரைப்படம் ரத்னம். இதில், விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கௌதம் மேனன், சமுத்திரக்கனி, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று, படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், ரத்னம் திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் புரமோசனும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், வரும் 26-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ