ரத்தம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்தம். இதை சி எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இதில் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடித்துள்ளனர்.
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கண்ணன் நாராயணன் இசையிலும் அமர்நாத் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகியுள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
Happy to release ORU NAAL from #Raththam by @TherukuralArivu 😊
Watch now : https://t.co/4zeflfXFDR pic.twitter.com/TggeRbxtvN
— vijayantony (@vijayantony) September 14, 2023

இப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஒரு நாள் எனும் முதல் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை பிரபல பாடகரும் ,பாடல் ஆசிரியருமான அறிவு பாடியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.