ரவி- கெனிஷா இருவரும் குன்றக்குடி கோயிலில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி தற்போது பராசக்தி, கராத்தே பாபு ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 14 வருடங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் ரவி- ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இருவரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் ரவி – ஆர்த்தியின் பிரிவிற்கு பாடகி கெனிஷா தான் காரணம் என ஏற்கனவே பல தகவல்கள் வெளிவந்தது. அதன்படி இருவரும் திருமண நிகழ்ச்சியில் ஜோடியாக கைகோர்த்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ரவி, ஆர்த்தி இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி அறிக்கைகளை வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் இருவரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய விவகாரம் குறித்து அறிக்கை வெளியிடக்கூடாது என தடை விதித்தது. சூழல் இப்படி இருக்க, நடிகர் ரவி – கெனிஷா இருவரும் இணைந்து சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கோவில் சாமி தரிசனம் செய்தனர். இருவரும் அர்ச்சனை செய்து வழிபட்ட பின்னர் கழுத்தில் மாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.