நடிகர் ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் 2 படங்களை அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக அறியப்படும் ரவி மோகன், புதிதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன்படி அவர் தொடங்கியுள்ள ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் திறப்பு விழா இன்று (ஆகஸ்ட் 26) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, ஜெனிலியா, மணிகண்டன், யோகி பாபு, அதர்வா, சுதா கொங்கரா, இயக்குனர் தமிழ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் ரவி மோகன் தயாரிக்க உள்ள முதல் இரண்டு படங்களின் பூஜை நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க உள்ள படங்கள் குறித்து அறிவித்துள்ளார்.
Intro video by @iam_RaviMohan explaining about his Production No 1 (#BroCode) & Production No 2 . He will also be venturing into direction starring @iYogiBabu. He will support young talents & small quality contents 👏♥️ pic.twitter.com/2TfqNU4Tu4
— AmuthaBharathi (@CinemaWithAB) August 26, 2025

இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் BRO CODE (ப்ரோ கோட்) என்றும் இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்க இருக்கிறார் என்றும், அதில் தானே நடிக்கப் போகிறேன் என்றும் அறிவித்துள்ளார்.
அடுத்தது தனது தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படம் யோகி பாபு படம் (ஆன் ஆர்டினரி மேன்) என்று கூறியுள்ளார். இது தவிர சிறிய பட்ஜெட் படங்களுக்கும், திறமை வாய்ந்த இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு ஏற்கனவே ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிக்க உள்ள படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இவர்களுடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரிப்பிரியா, மாளவிகா மனோஜ் ஆகியோரும் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.