ரவி மோகன் இயக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிபடங்களை கொடுத்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் நடிகர் ரவி மோகன். இவர் தற்போது ‘கராத்தே பாபு’ படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ரவி. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தயாரிப்பாளராக உருவெடுத்த இவர், ‘ப்ரோ கோட்’ எனும் திரைப்படத்தை தானே தயாரித்து, ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் இவர், யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி, இயக்குனராகவும் மாற உள்ளார் என சமீபத்தில் ரவி மோகனே அறிவித்துள்ளார். இந்த படமானது ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த படத்துக்கு ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றும் கிடைத்துள்ளது. அதன்படி வருகின்ற (செப்டம்பர் 10) ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரவி – யோகி பாபு கூட்டணியிலான இந்த படம் காமெடி கலந்த கதைக்களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.