- Advertisement -
அமரன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காணொலி இணையத்தில் வௌியாகி டிரெண்டாகி வருகிறது.
கோலிவுட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் இறுதியாக வௌியான திரைப்படம் அயலான். இத்திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கியிருந்தார். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படம் நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்தனின் கதையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகிறது.
https://x.com/i/status/1795470200252559658