Homeசெய்திகள்சினிமாவாரிசு படத்தின் விநியோக உரிமையை பெற்றது ரெட் ஜெயன்ட் நிறுவனம்

வாரிசு படத்தின் விநியோக உரிமையை பெற்றது ரெட் ஜெயன்ட் நிறுவனம்

-

- Advertisement -

வாரிசு படத்தின் விநியோக உரிமையை பெற்றவர்களின் பட்டியலை படக்குழு வெளியிட்டு திட்டமிட்டபடி வாரிசு திரைப்படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட இடங்களில் விநியோக உரிமையை பெற்றது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்.

தற்போது வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் வாரிசு திரைப்படத்தை வெளியிடும் உரிமையை வாங்கி இருந்த 7 ஸ்கிரின் ஸ்டுடியோ நிறுவனமானது தங்களது வெளியீட்டு உரிமையை தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக விநியோக உரிமை பிரித்துக் கொடுத்திருக்கிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு விநியோக உரிமையை கொடுத்தது.

இந்த கடைசி நேரம் மாறுதல் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால் சென்னை, செங்கல்பட்டு ஆகிய இடங்கள் மிக முக்கியமாக பார்க்கப்படும். திரைப்படத்தின் வசூல் என்ன என்பது இந்த இடங்களில் முடிவாகும் என்று கருதப்படுகிறது.

கோயம்புத்தூரில் அதிக ரசிகர்கள் பட்டாலம் இருக்க கூடிய காரணத்தினால் இந்த வாரிசு திரைப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு மட்டுமில்லாமல் கோயம்பத்தூர் இடங்களையும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. அதனை தொடர்ந்து வேறு எந்த இடங்களையும் வாங்காமல் இருந்த ரெட் ஜெயன்ட் நிறுவனம் கடைசி நேர மாறுதலாக நார்த் ஆற்காடு மற்றும் சவுத் ஆற்காடு ஆகிய இந்த இடங்களையும் கூட சேர்த்து வாங்கி இருக்கிறது. எனவே இந்த பொங்கல் வெளியிட்டின்படி ரெட் ஜெயின்ட் நிறுவனம் வாரிசு திரைப்படத்தின் வசூலை நிர்ணயிக்கக் கூடிய மிக முக்கியமான இந்த நான்கு இடங்களை இந்த நிறுவனம் பெற்றது.

அதேபோல் கன்னியாகுமாரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் முத்துக்குமார் என்பவர் விநியோக உரிமையை பெற்றுள்ளார். மதுரையில் 5 ஸ்டார் சினி என்டர்டெயின்மென்ட் விநியோக உரிமையை பெற்றுள்ளது. திருச்சி மற்றும் தஞ்சாவூரில் வி.எஸ்.பாலமுரளி விநியோக உரிமையை பெற்றுள்ளார். சேலத்தில் செந்தில் என்பவர் வாரிசு திரைப்படத்தின் விநியோக உரிமையை பெற்று இருக்கிறார்.

இறுதி நேர மாறுதலாக சென்னை, செங்கல்பட்டு,0 கோயம்புத்தூர், நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு ஆகிய இடங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் விநியோக உரிமையை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

MUST READ