ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படமான ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது 2025 மே மாதம் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. மேலும் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது கார்த்திக் சுப்பராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரஜினி இந்த விழாவில் என்ன பேசப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.