சூர்யா நடிப்பில் உருவாகும் ரெட்ரோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு கங்குவா திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் சரிவை சந்தித்தது. அதன் பிறகு நடிகர் சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார் சூர்யா. இதற்கிடையில் இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜும், சூர்யாவும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். காதல் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்து இருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இந்த படம் 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி பாடகர் கார்த்திக் குரலில் உருவாகி இருக்கும் ரெட்ரோ படத்தின் முதல் பாடல் 2025 பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.