ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் சூர்யாவின் 44வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படமானது காதல் கலந்த கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அந்தமான், சென்னை, ஊட்டி, கேரளா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தது வருகின்ற மே 1ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என ஏற்கனவே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த படத்தில் இருந்து ‘கனிமா’ எனும் இரண்டாவது பாடல் நாளை (மார்ச் 21) வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.