Homeசெய்திகள்சினிமாஇந்தியாவைக் கலக்கிய 'காந்தாரா'... 2-ம் பாகம் பற்றி அப்டேட் கொடுத்த ரிஷப் ஷெட்டி!

இந்தியாவைக் கலக்கிய ‘காந்தாரா’… 2-ம் பாகம் பற்றி அப்டேட் கொடுத்த ரிஷப் ஷெட்டி!

-

- Advertisement -

கன்னட சினிமா சமீப காலமாக இந்தியாவே வியக்கும் பான் இந்தியா படங்களை இயக்கி வருகின்றனர். ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கிய காந்தாரா திரைப்படம் இந்திய அளவில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

கன்னட பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்கியத்துடன்  தெலுங்கு மற்றும் இந்தி, தமிழ் மொழிகளிலும் நல்ல வசூலை வாரிக் குவித்தது. காந்தாரா படத்தின் பெரும் வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதாக ரிஷப் ஷெட்டி அறிவித்தார்.

we-r-hiring

2-ம் பாகம் காந்தாரா முதல் பாகத்தின் கதைக்கு முந்தைய காலகட்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே படத்தின் தயாரிப்பு இந்த ஆண்டு தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ரிஷப் ஷெட்டி படத்தின் முதற்கட்ட கதையை எழுதி முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இறுதி கட்ட கதையை எழுதி முடிக்க அவர் அதிக அவகாசம் எடுக்க இருக்கிறாராம்.

ரிஷப் ஷெட்டி, காந்தாராவின் முன்பகுதியை உருவாக்கும் யோசனை முதல் பாகத்தை உருவாக்கும் போதே தனக்கு தோன்றியதாக தெரிவித்துள்ளார்.

“காந்தாராவின் பின்னணியில் இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது. இந்த கட்டத்தில், இந்த படத்தின் கதைக்காக முழு ஆழத்தையும் நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம். இன்னும் அதிக வேலைகள் இருக்கிறது. படத்திற்கான இறுதி முடிவுகளை எடுக்கும் வரை, படம் பற்றிய விவரங்களை பகிர முடியாது” என்றும் ரிஷப் தெரிவித்துள்ளார்.

MUST READ