நடிகர் ரிஷப் ஷெட்டி, காந்தாரா சாப்டர் 1 குறித்து பேசி உள்ளார்.
காந்தாரா படத்தின் மாபெரும் வெற்றி ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஆரம்பத்திலிருந்தே அதிகமாக்கி வந்தது. அதன்படி ‘காந்தாரா’ படத்தை போல் தெய்வ நம்பிக்கை மையமாக வைத்து ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தையும் கொடுத்திருந்தார் ரிஷப் ஷெட்டி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உலக தரத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். காந்தாராவின் முந்தைய கதையாக இருந்தாலும் அதன் மேக்கிங், விஎஃப்எக்ஸ் காட்சிகள் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பெரிய அளவில் பேசப்படுகிறது.
அந்த வகையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. அடுத்தது இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி வெற்றி நடை போடுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய ரிஷப் ஷெட்டி, ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை பணத்திற்காக எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அதன்படி அவர், “இந்த படத்தை படத்திற்காக மட்டும் எடுத்திட முடியாது. நான் வேறு ஏதாவது ஒரு கதையை படமாக்கி இருந்தால் இந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து இருக்க மாட்டேன். காந்தாராவை மக்கள், கலாச்சார வேறுபாடுகளை கடந்து பெரிய அளவில் பேசிய போது இதையும் நியாயத்துடன் எடுக்க நினைத்தேன். காந்தாராவின் முந்தைய கதையை சொல்வதன் மூலம் அதற்கு நியாயம் சேர்க்க முடியும் என்று நம்பினேன். தெய்வீகத்தின் தலையீட்டால்தான் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை எடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.


