கடந்தாண்டு அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் அயோத்தி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் இணைந்து பிரீத்தி ஆஸ்ரானி, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அயோத்தி படம் குறித்து பேசி உள்ளார். அதாவது, “அயோத்தி படத்தில் நான் தான் ஹீரோவாக நடிக்க இருந்தேன். ஒரு சில காரணங்களால் அந்த வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன். சசிகுமார் நடித்த பிறகு அந்த படம் எனக்கு மிகவும் பிடித்தது” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்திலும் தான் தான் ஹீரோவாக நடிக்க இருந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் தற்போது சொர்க்கவாசல் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை சித்தார்த் விஸ்வநாத் இயக்க இப்படம் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதே சமயம் ஆர்.ஜே. பாலாஜி அடுத்ததாக சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.