Homeசெய்திகள்சினிமாஎப்படி இருக்கிறது ஆர் ஜே பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' படம்!

எப்படி இருக்கிறது ஆர் ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படம்!

-

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி நடித்து, இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இயக்குனர் கோகுல் இயக்கியிருந்த இப்படத்தில் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
தன்னுடைய கிராமத்தில் முடி திருத்தும் கலைஞராக இருக்கும் சாச்சாவைப் (லால்) பார்த்து, நானும் அவர் போலவே முடி திருத்தும் கலைஞராக, இந்திய அளவில் புகழ்பெற்ற சிகை அலங்கார கலைஞன் ஆக வேண்டும் என்று விரும்புகிறார் ஆர் ஜே பாலாஜி. பின் அவர் அந்த சாதனையைப் படைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மையகரு. எப்படி இருக்கிறது ஆர்ஜே பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' படம்!ஜான் விஜய்யிடம் ஹேர் ஸ்டைலிஷ் ஆக வேலை பார்த்து வரும் ஆர் ஜே பாலாஜி பின்னர் சொந்தமாக சிங்கப்பூர் சலூன் என்னும் கடையை தொடங்க நினைக்கிறார். அதனால் அவருக்கு பல சிக்கல்கள் அதன் பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக் கதை. முதல் பாதியில் சத்யராஜின் காமெடிக் காட்சிகளும், சாதிக்கத் துடிக்கும், ஆர் ஜே பாலாஜியின் போராட்டத்தையும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக கோகுல் படங்களில் இருக்கும் காமெடி இந்த படத்திலும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி காமெடியில் அதகளம் செய்கிறார். நாயகியாக வரும் மீனாட்சி சௌத்ரிக்கு பெரியதளவு ஸ்கோப் இல்லை.எப்படி இருக்கிறது ஆர்ஜே பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' படம்! ஜீவா, லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி மேலும் ஒரு தமிழ் நடிகர் சர்ப்ரைஸ் கேமியோவாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகளும் சிறப்பாகவே அமைந்திருந்தன. முதல் பாதி படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக இருக்க இரண்டாம் பாதியில் சிறுசிறு சொதப்பல்கள். பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை.எப்படி இருக்கிறது ஆர்ஜே பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' படம்! ஆனால் ராவேத் ரியாஸின் பின்னணி இசை படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. தென்காசி பகுதிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் ஓரளவுக்கு தியேட்டரில் பார்த்து மகிழக்கூடிய படமாகவே அமைந்துள்ளது சிங்கப்பூர் சலூன்.

MUST READ