Homeசெய்திகள்சினிமாஆர்.ஜே. பாலாஜியின் 'சொர்க்கவாசல்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆர்.ஜே. பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -
kadalkanni

ஆர்.ஜே. பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளியான நானும் ரெளடி தான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆர்.ஜே. பாலாஜியின் 'சொர்க்கவாசல்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!அது தொடர்ந்து இவர் எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் ஆர் ஜே. பாலாஜி தற்போது சொர்க்கவாசல் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை சித்தார்த் விஸ்வநாத் இயக்க ஸ்வைப் ரைட் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்.ஜே. பாலாஜி உடன் இணைந்து கருணாஸ், நட்டி நடராஜ், சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கும் நிலையில் பிரின்ஸ் ஆண்டர்சன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தது இந்த படமானது வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக் குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ