ஆர் ஜே பாலாஜி நடிப்பில் அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் சொர்க்கவாசல். இந்த படம் இன்று (நவம்பர் 29) திரையிடப்பட்டுள்ளது. இந்த படமானது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன்படி செய்யாத தவறுக்காக ஜெயிலுக்குள் செல்லும் ஒரு தனி மனிதன் ஜெயிலில் துன்பத்தை எதிர்கொள்கிறான் என்பதை பற்றிய கதைதான் இது.
தனது குடும்பத்துடன் சிறிய வீட்டில் வசித்து வரும் படத்தின் நாயகன் ஆர்.ஜே பாலாஜி தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்து குடும்பம் நடத்துகிறான். அப்போது ஒரு கட்டத்தில் அவர் எதிர்பாராத விதமாக சிறைக்கு செல்ல நேரிடுகிறது. அங்கு இவருக்கும் ரெளடிகளுக்கும் சண்டை ஏற்படுகிறது. அதை பெரிய கலவரமாக மாறுகிறது. எனவே ஜெயிலில் இருந்து எப்போது வெளியே செல்வோம் என்று தவிக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. மற்றொரு பக்கம் ஆர்.ஜே பாலாஜியின் அம்மாவும் கதாநாயகியும் ஆர்.ஜே பாலாஜி சிறைக்கு சென்றதால் கலங்கி நிற்பதை காட்டுகிறார்கள். இப்படி இருக்க இறுதியில் ஆர்.ஜே பாலாஜி ஜெயிலில் இருந்து வெளியேறினாரா ?இல்லையா? என்பதுதான் படத்தின் மீது கதை.
சித்தார்த் விஸ்வநாத் அறிமுக இயக்குனர் தான் என்றாலும் தனது திரைக்கதையின் மூலம் வலு சேர்த்துள்ளார். அதேபோல் ஆர் ஜே பாலாஜியின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சானியா ஐயப்பன், கருணாஸ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்துள்ளனர். மேலும் விசாரணை அதிகாரியாக நட்டி நடராஜும் வழக்கம்போல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிறிஸ்டோ சேவியரின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. முதல் பாதி உணர்வுப்பூர்வமாக சென்றாலும் இரண்டாம் பாதியில் வன்முறை காட்சிகள் சில சலிப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இரண்டாம் பாதை படத்தின் முக்கியமான பகுதியாக அமைந்திருக்கிறது. அடுத்தது சில லாஜிக் இல்லாத காட்சிகள் இருந்தாலும் படம் விறுவிறுப்பாக சென்று ரசிகர்களை கண்ணை சிமிட்ட விடாமல் பார்க்க வைக்கிறது. எனவே மொத்தத்தில் சொர்க்கவாசல் திரைப்படம் ஒர்த்தான படம்.