பெப்சி யூனியன் என்ற பெயரில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிகின்றார்கள். இனி இதுபோன்ற பிரச்சனை எங்களிடம் வைத்துக்கொண்டால் பெப்சி உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அடிப்போம் உதைப்போம் முடிந்தால் வெட்டுவோம் என ஆக்ரோஷமாக கத்திய சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே. அன்புச்செல்வன்!
தமிழ்நாடு திரைப்பட சிறு பட முதலீட்டு தயாரிப்பாளர்களின் சங்கங்கள் தயாரிக்கும் படங்களின் படப்பிடிப்பை நடத்தவிடாமல் தொந்தரவு செய்யும் பெப்சி யூனியனை கண்டித்து சிறுபட முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே. அன்புச்செல்வன் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அச்சங்கத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “வலை என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு திருவேற்காடு கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. 5 லட்சம் ரூபாய் செலவில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது light யூனியன் சங்க தலைவர் பாஸ்கர் என்பவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பெப்சி உறுப்பினர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்று மிரட்டும் தொனியில் மரியாதை இல்லாமல் பேசியுள்ளார்.
அதன் பின் எனக்கு அழைப்பு வந்ததன் பெயரில் நான் சம்பவ இடத்திற்கு சென்று பேசிய பொழுதும் அவர்கள் கேட்பது போல் தெரியவில்லை. அதனை தொடர்ந்து நான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து காவலர்கள் வந்த பிறகு தான் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதன் பிறகு பிரச்சனை குறித்து பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி அவர்களிடம் தெரிவித்தோம். அதன் பின்னர் சமந்தப்பட்ட நபரை தொலைபேசியின் (conference call) மூலம் அழைத்து இனி இதுபோன்ற பிரச்சனைகளுக்கு போக வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
பெப்சிக்கும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் மோதல் வேண்டாம் என்று செயல்பட்ட ஆர்.கே. செல்வமணி அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் இரு சங்கத்தின் தலைவர்கள் தான் பேசி முடிவு எடுக்க வேண்டும். இதுபோன்று செய்வதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது?
நான் ஆர்.கே. செல்வமணியை குறை சொல்லவில்லை. இவர்கள் ஒரு படத்தை நிறுத்துவதற்கு அரசு அதிகாரம் கொடுத்ததா? இது தான் என்னுடைய கேள்வி.
பெப்சி உறுப்பினர்கள் தான் வேலை செய்ய வேண்டும் என்று ஏதேனும் சட்டம் உள்ளதா?
தனுஷ்,சிம்பு, விஜய்சேதுபதி,சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற எந்த நடிகரும் எங்களுக்கு கால் ஷீட் தர மாட்டார்கள். எல்லா நடிகர்களும் ஒரு டீம் வைத்துள்ளார்கள். அவர்கள் சொல்லும்படி தான் ஹீரோ ஹீரோயின் எல்லாரும் நடந்துகொள்வார்கள்.
நாங்கள் எடுத்த படங்களை வாங்குவதற்கும், பார்ப்பதற்கும் ஆட்கள் இல்லை என்று கவலைபட்டுக்கொண்டியிருக்கிறோம். இதில் இந்த பிரச்சனை வேறு. ஆனால் ஆர்.கே. செல்வமணி இனி இதுபோன்று பிரச்சனை நடக்காது என்று தெளிவாக கூறிவிட்டார்.
பெப்சி யூனியன் என்ற பெயரில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிகின்றார்கள்.
இனி யாரேனும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கதிதிடம் பிரச்சனை செய்தால் படப்பிடிப்பிற்கு செலவு செய்யப்பட்ட அனைத்து தொகையையும் வாங்குவோம்.
வழிபறி போன்று செயல்படுகின்றனர். பெப்சி யூனியன் உறுப்பினர்கள் அல்லாத நபர்களை பெப்சி யூனியன் பெயரை பயன்படுத்தி 60,70 வரை பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.
எந்த சூழலிலும் உறுப்பினர்கள் இல்லாத நபர்களின் படப்பிடிப்பு நிறுத்த கூடாது என்று அதன் தலைவர் ஆர்.கே. செல்வமணி கண்டிக்க வேண்டும். இனி இதுபோன்ற பிரச்சனை எங்களிடம் வைத்துக்கொண்டால் பெப்சி உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அடிப்போம், உதைப்போம், முடிந்தால் வெட்டுவோம்” என்றார்.
இது ரஜினி ,விஜய் படங்களை பெப்சி உறுப்பினர்கள் நிறுத்த முடியுமா என்ற கேள்விக்கு,
ரஜினி, கமல் என பெரிய நடிகர்கள் யாரு படம் எடுத்தாலும் பெப்சி யூனியன் உறுப்பினர்கள் நிறுத்துவார்கள். நிறுத்தியும் உள்ளார்கள் வேண்டுமானால் அந்தந்த தயாரிப்பாளரிடம் கேட்டு பாருங்கள். அவர்களின் கஷ்டத்தை கூறுவார்கள் என கோபமாக பதிலளித்தார்.
பெப்சி யூனியனில் உறுப்பினராக இல்லாத நபர்கள் படத்தில் கட்சி யூனியன் உறுப்பினர்கள் பணியாற்றினால் அவர்களை அழைத்து செல்ல கட்சி யூனியனுக்கு உரிமை உண்டு. ஆனால் எங்கள் படத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.
இவர்கள் ஒரு டீம் செட் பண்ணி ஷூட்டிங்கை நிறுத்தி பணம் வசூலிப்பதையே வேலையாக செய்து வருகிறார்கள். இது போன்று நடக்காது என்று செல்வமணி உறுதியளித்துள்ளார்.
அதேபோல் இந்த படத்தின் இயக்குனரிடம் உங்கள் சங்கத்தை தடை செய்வதற்கு நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி உள்ளோம் எனவும் கூறியுள்ளார்கள்.
அதேபோல் சிறு படங்கள் தோல்வி பெறுவதற்கு சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சரியாக இல்லை என்பது தான் உண்மை. ஒரே ஆள் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பதில் படத்தின் தரம் இருப்பதில்லை.
சில தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் வருகிறதே என்ற கேள்விக்கு,
யார் அழைத்தாலும் இவர்கள் ஏன் போகிறார்கள்.
*விஜய் நடிப்பே தெரியாமல் தான் சினிமாவிற்கு வந்தார். இன்றைக்கு ஒரு அரசியல் கட்சி தலைவராக இருக்கின்றார். இது போல தான் அனைவரும் கஷ்டப்பட்டு தான் வந்துள்ளார்கள்” என்றார்


