spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரோபோ சங்கர் உடல்நிலையில் பின்னடைவு.... ரசிகர்கள் பிரார்த்தனை!

ரோபோ சங்கர் உடல்நிலையில் பின்னடைவு…. ரசிகர்கள் பிரார்த்தனை!

-

- Advertisement -

ரோபோ சங்கர் உடல்நலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.ரோபோ சங்கர் உடல்நிலையில் பின்னடைவு.... ரசிகர்கள் பிரார்த்தனை!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரோபோ சங்கர். இவர் மிமிக்ரி, நடனம் என தனது திறமைகளை வெளிகாட்டி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இது தவிர இவர் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி போன்ற படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதற்கிடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி இருக்கிறார். இவ்வாறு சின்னத்திரை, வெள்ளித்திரை என பிசியாக பணியாற்றி வரும் ரோபோ சங்கர் சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருடைய மெலிந்த தோற்றம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மஞ்சள் காமாலையில் இருந்து குணமடைந்து வந்த இவர், அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள தொடங்கினார்.ரோபோ சங்கர் உடல்நிலையில் பின்னடைவு.... ரசிகர்கள் பிரார்த்தனை! அந்த வகையில் சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ரோபோ சங்கருக்கு நீர்ச்சத்து குறைபாடும், குறைந்த ரத்த அழுத்தமும் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து உடன் இருந்தவர்கள் ரோபோ சங்கரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவரின் அறிவுரைப்படி அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 17) மாலை முதல் ரோபோ சங்கரின் உடல்நலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரோபோ சங்கர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

MUST READ