spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது 'ஜமா' படப்பிடிப்பு!

ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது ‘ஜமா’ படப்பிடிப்பு!

-

- Advertisement -

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது 'ஜமா' படப்பிடிப்பு!தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறது.

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கின்றனர். ‘ஜமா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது 'ஜமா' படப்பிடிப்பு!படத்தின் முக்கிய சிறப்பம்சமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா நடிப்புக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவருடன் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பை ‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் கையாள, ஒளிப்பதிவை ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ பட ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர் கேலிஸ்ட் மேற்கொள்கிறார். மேலும் படத்தொகுப்பை பார்த்தா, மகேந்திரன் கலை இயக்கத்தை செய்கிறார். பாடலாசிரியர்கள் மோகன்ராஜன், பாக்கியம் சங்கர் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கவனிக்கிறார்.

we-r-hiring

சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படைப்பு, அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பேமிலி என்டர்டெயின்ராக உருவாகிவருகிறது. பூஜையுடன் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிற சூழலில், இப்படம் வருகிற சம்மரில் ரசிகர்களை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூட் ‘ROOT – Running Out of Time’ திரைப்படத்தின் ‘First look’யை ரஜினிகாந்த் வெளியிட்டாா்

MUST READ