spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரூ. 250 கோடி மதிப்புடைய சொத்து.... சர்ச்சைகளுக்கிடையே திருமணம் செய்து கொண்ட பாலா!

ரூ. 250 கோடி மதிப்புடைய சொத்து…. சர்ச்சைகளுக்கிடையே திருமணம் செய்து கொண்ட பாலா!

-

- Advertisement -

நடிகர் பாலா கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான அன்பு என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் சில படங்களில் நடித்து வந்த இவர் அஜித்துடன் இணைந்து வீரம் திரைப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்திருந்தார்.ரூ. 250 கோடி மதிப்புடைய சொத்து.... சர்ச்சைகளுக்கிடையே திருமணம் செய்து கொண்ட பாலா! அடுத்தது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்திருந்தார் பாலா. மேலும் இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அம்ருதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். ரூ. 250 கோடி மதிப்புடைய சொத்து.... சர்ச்சைகளுக்கிடையே திருமணம் செய்து கொண்ட பாலா!பாலா – அம்ருதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டு இருவரும் பிரிந்தனர். அடுத்தது 2021ல் நடிகர் பாலா எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இருந்தபோதிலும் பாலாவிற்கும் முதல் மனைவி அம்ருதாவிற்கும் இடையில் பல பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும் நடிகர் பாலா அம்ருதாவையும் அவரது மகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.ரூ. 250 கோடி மதிப்புடைய சொத்து.... சர்ச்சைகளுக்கிடையே திருமணம் செய்து கொண்ட பாலா! இது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் நடிகர் பாலா தன்னுடைய தாய் மாமன் மகள் கோகிலா என்பவரை நேற்று (அக்டோபர் 23) திருமணம் செய்து கொண்டுள்ளார். பாவ குளம் கோயிலில் வைத்து இவர்களது திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அதாவது தனது 250 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களையும் தன்னையும் கவனித்துக் கொள்ள ஒரு துணை தேவைப்படுவதால் இந்த திருமணத்தை செய்து கொண்டதாக நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.

MUST READ