spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹீரோக்களால் விமர்சிக்கப்படும் சாய் பல்லவி

ஹீரோக்களால் விமர்சிக்கப்படும் சாய் பல்லவி

-

- Advertisement -

பொதுவாக, ஒரு நடிகை என்றால் அவரைப் பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும் இது இயல்பான ஒன்று.

நடிகைகளை பத்திரிகைகள் விமர்சித்து எழுதும் அல்லது இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ யாராவது ஒரு வரால் விமர்சனம் ஒரு நடிகைக்கு வரும்.

we-r-hiring

ஆனால், இதில் நடிகை சாய் பல்லவி சற்று  வித்தியாசமானவராக தெரிகிறார். அவரை விமர்சிப்பது ஹீரோக்கள் தான்.

முதல் முதலில் ”கஸ்தூரி மான்” என்ற தமிழ் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் சாய் பல்லவி.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து பிறகு தெலுங்கு சென்று நடித்து அங்குள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர் சாய் பல்லவி.

அழகு என்பது தோற்றத்தில் இல்லை நம் குணத்தில் தான் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்காக மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி உடன் இணைந்து நடித்த ”பிரேமம்” படத்தில் மிகவும் எளிமையான தோற்றத்தில் மலர் டீச்சர் ஆகவே மாறி இருந்தார்.

அந்தபடம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பின்னர் மாரி-2, NGK போன்ற தமிழ் படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை கண்டார்.

அந்த வெற்றியைத் தொடர்ந்து கமர்சியல் கதைகளில் நடிக்க விரும்பாத சாய் பல்லவி ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இதனால், அவரைப்பற்றி சில ஹீரோக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

அது பற்றி சிறிதும் கவலைப்படாத சாய் பல்லவி ஜெர்மனியில், டாக்டருக்கு படித்திருந்தாலும் சினிமாவில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும் எனது நியாயமான விருப்பத்தை புரிந்து கொண்ட என் பெற்றோர் தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இதனால் யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன்.

திரையிலும், நேரிலும் என்னை பார்ப்பவர்கள் தங்கள் வீட்டு பெண் மாதிரி இருக்கிறேன் என்று சொல்கின்றனர் அதைக் கேட்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

தற்போது, சிவகார்த்திகேயனின் 24வது படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் சாய் பல்லவி.

MUST READ