கே ஜி எஃப் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆக்சன் திரைப்படம் சலார். சமீபத்தில் டிசம்பர் 22 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு முழுக்க முழுக்க பிரபாஸ் ஒரு ஆக்சன் படத்தில் களமிறங்கியிருப்பதாக அவருடைய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் டப் செய்து வெளியிடப்பட்டது. இதனால் படத்தின் வசூல் பல மடங்கு அதிகமாகி உள்ளது. முதல் நாள் முதல் வசூல் மட்டும் சுமார் 178.7 கோடியை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது “சலார்”.
இதுவரை வெளியான இந்திய படங்களில் விஜய் நடிப்பில் அக்டோபர் மாதம் வெளியான லியோ திரைப்படம் முதல் நாள் முதல் வசூலாக 150 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அந்த சாதனையை சலார் முறியடித்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இருப்பினும் இந்த செய்தி உண்மை அல்ல முதல் நாள் முதல் வசூல் 178 கோடி கிடையாது, அதைவிட குறைவு தான் என்றும் சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் பரவி வருகின்றன. எது எப்படியோ அடுத்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து வார இறுதி நாட்கள், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் வர உள்ளதால் நிச்சயம் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்று அடித்து நொறுக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
- Advertisement -