கே ஜி எஃப் படங்களின் மூலம் பிரபலமான பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் தான் சலார் PART1- CEASERFIRE. இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து ஜெகபதி பாபு, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹோம்பலே ஃபில்ம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ரவி பஸ்ருர் இசையமைக்க, புவன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து ஆகாச சூரியனை எனும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. கே ஜி எஃப் படத்திற்குப் பிறகு உலக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சலார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலை வருகிறது. அந்த வகையில் படம் உயிர் நண்பர்கள் இருவரும் எதிரிகளாக மாறும் கதையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு கமர்சியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு ,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் இரண்டாவது ட்ரெய்லரை படக்குழுவினர் இன்று காலை 10.42 மணி அளவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் THE FINAL PUNCH என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் படக்குழுவினர் இந்த ட்ரெய்லரை வெளியிடுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்யும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.