- Advertisement -
அமெரிக்காவில் மட்டும் 2 ஆயிரம் திரையரங்குகளில் சலார் திரைப்படம் வெளியாக உள்ளது.
கேஜிஎப் எனும் பிரம்மாண்டத்தை திரைக்கு கொண்டு வந்த இந்தியாவின் மாபெரும் இயக்குநராக உருவெடுத்தவர் பிரசாந்த் நீல். யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் முதல் பாகம், யாரும் எதிர்பார்க்காத அளவு பெரும் வெற்றி பெற்றது. வசூலையும் வாரிக் குவிந்தது. இதைத் தொடர்ந்து கேஜிஎஃப் இரண்டாம் பாகம் உருவானது. முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இருப்பினும், உலகம் முழுவதும் வௌியான கேஜிஎஃப் 2 அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வரலாற்றுச் சாதனை புரிந்தது. அதுமட்டுமன்றி யாஷ் மற்றும இயக்குநர் பிரசாந்த் நீலை, இந்தியாவின் மாபெரும் நட்சத்திரங்களாக நிலை நிலைத்தியது.
